பல்வேறு தடைகளுக்கு பிறகு, ஜனவரியில் புதிய கட்சி தொடங்கப்போவதாகவும், இதற்கான தேதியை வரும் டிச.,31ம் தேதி அறிவிக்க உள்ளதாகவும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் அவர் நியமித்தார்.

இதைத் தொடர்ந்து, அரசியல் கட்சியின் கொள்கை, நோக்கம் குறித்து தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மூத்த நிர்வாகிகள் அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன் மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனையின் போது, பல்வேறு மாவட்டங்களில் புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும், திருப்தியில்லாத மற்றும் செயல்படாத மாவட்ட நிர்வாகிகளை மாற்றுவது தொடர்பாகவும் முடிவு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks