திறமையான நடிகையான விஜே சித்ரா அதற்குள் போய்விட்டாரே என்று ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தன் கெரியரை துவங்கி பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் துவங்கினார் விஜே சித்ரா. பார்க்க பக்கத்து வீட்டு பெண் போன்று இருக்கிறார் என்று கூறி ரசிகர்கள் அவரை கொண்டாடினார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா நசரத்பேட்டையில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சித்ராவின் தாய் தெரிவித்துள்ளார்.

தைரிமயான பெண்ணான சித்ரா இப்படி ஒரு முடிவை எடுத்திருக்க வாய்ப்பில்லை என்று அவரின் அம்மா தெரிவித்துள்ளார். சித்ரா படுக்கையில் பிணமாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் அவர் கன்னத்தில் காயம் இருக்கிறது. தற்கொலை செய்து கொண்டவரின் கன்னத்தில் எப்படி காயம் ஏற்பட்டது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

விஜே சித்ரா கொலை செய்யப்பட்டுள்ளாரா என்று சமூக வலைதளங்களில் பேச்சு கிளம்பியுள்ளது. இந்நிலையில் சித்ரா பற்றி அறிந்த ஐஸ்வர்யா ராஜேஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
நடிகை சித்ராவின் மரணம் குறித்து அறிந்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். நல்ல திறமையான நடிகை அதற்குள் சென்றுவிட்டார். பிரச்சனைகளுக்கு தற்கொலை தீர்வு அல்ல என்பதை மக்கள் உணர வேண்டும். ஒரு சமூகமாக நாம் இதை மேலும் வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சித்ரா நள்ளிரவு வரை இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்திருக்கிறார். நேற்று கூட சந்தோஷமாக புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என்பதை நம்ப முடியவில்லை என்கிறார்கள் ரசிகர்கள்.

சித்ராவின் ஆத்மா சாந்தியடையட்டும். ஆனால் அவரின் மரணம் குறித்த உண்மையை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். விஜே சித்ராவுக்கு அண்மையில் தான் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

கொரோனா காலத்தில் யாரையும் அழைக்காமல் திருமணம் செய்ய விரும்பவில்லை. கொரோனா பிரச்சனை தீர்ந்த பிறகு அனைவரையும் அழைத்து திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சித்ரா தெரிவித்தார். கடைசியில் இப்படி ஆகிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks