truetamilnews.com


கோவை மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குவது பொள்ளாச்சி ஆகும். ஆசியாவில் உள்ள மிகப்பெரிய சந்தைகளில் பொள்ளாச்சி சந்தையும் ஒன்றாகும். 

தமிழகத்தின் “தென்னை தலைநகரமாக” பொள்ளாச்சி விளங்குகிறது.  தமிழகத்தின் தென்னை உற்பத்தியிலும் தென்னை நார் உற்பத்தியிலும் முன்னோடியாக பொள்ளாச்சி விளங்குகிறது. 

தமிழகத்தில் உள்ள 39 நாடாளமன்ற தொகுதிகளில் பொள்ளாச்சியும் ஒன்றாகும்.

கோவை மற்றும் கேரளாவை தென் தமிழகத்துடன் இணைக்கும் முக்கிய இரயில்வே சந்திப்பாக பொள்ளாச்சி உள்ளது. 

பொள்ளாச்சி நகரப்பகுதிகளில் மக்கள் தொகை 135235 ஆகும். தமிழகத்தின் 27வது மிகப்பெரிய நகரப்பகுதியாக பொள்ளாச்சி விளங்குகிறது.

பொள்ளாச்சி நகராட்சி வரும் நவம்பர் மாதம் 2020ல் நூற்றாண்டு விழாவை கொண்டாட உள்ளது. 
சமீபத்தில் பொள்ளாச்சியை ஏற்றுமதி சிறப்பு வாய்ந்த நகரமாக (Pollachi-The Town of Export Excellence for Coir Product) மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் தென்னை விவசாயம், தொழில் வளம் மற்றும் வேலைவாய்ப்பு பெருகும். 

ஆறுகள், அணைகள், குளங்கள், சிற்றோடை, வாய்க்கால்கள் என நீர்நிலைகள் நிறைந்த விவசாய பூமியாக பொள்ளாச்சி உள்ளது.

விவசாயம் செழிக்கும் 


பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவித்தால் ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்திற்கு அதிக கவனம் செலுத்தி திட்டத்தை விரைவில் செயல்படுத்த வாய்ப்பு உருவாகும். 

ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் உருவாகும்போது பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம், கிணத்துக்கடவு, வால்பாறை வட்டங்கள் ஒன்றாக ஒரே மாவட்டமாக இருந்தால் இந்த திட்டம் உருவாக எளிமையாக இருக்கும். 
பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தை நவீனப்படுத்தினால் அரசு துறைகளின் தனிப்பட்ட கவனம் மற்றும் அதிக நிதி நம் பகுதி விவசாய பாசனத்திற்கு கிடைக்கும். 

அரசாங்கத்தின் தென்னை ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் தென்னை சார்ந்த பொருட்களுக்கான கொள்முதல் நிலையங்கள் உருவாக்கப்படும்.

மாவட்ட நீதிமன்ற அலுவலகம்


பொள்ளாச்சியை மாவட்டமாக்கினால் மாவட்ட நீதிமன்ற அலுவலகம் பொள்ளாச்சியில் நிறுவப்படும். வழக்குகளுக்காக வக்கீல்களும், நீதிபதிகளும், நீதிமன்ற ஊழியர்களும் மற்றும் பொதுமக்களும் கோவை செல்ல வேண்டிய தேவை இருக்காது. அலைச்சல் மற்றும் வீண் செலவு குறையும். பொள்ளாச்சியில் சட்டக் கல்லூரி அமையவும் வாய்ப்பு உருவாகும்.

அரசு கல்லூரிகள்

லட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் பொள்ளாச்சியில் ஒரு அரசு கல்லூரி கூட கிடையாது. 
சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட கல்லூரிகூட பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரி தான்
தனி மாவட்டமாக அறிவித்தால் அரசின் கொள்கையான ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அரசு கல்லூரி என்பதன் படி அரசு பொறியியல் கல்லூரி, அரசு செவிலியர் கல்லூரி, அரசு மருத்துவக் கல்லூரி, வேளாண் கல்லூரி முதலியவை தானாக கிடைக்கும் 

மாணவர்களுக்கு குறைவான கட்டணத்தில் சிறப்பான கல்வி கிடைக்கும். 

சுற்றுலாத்துறை வளர்ச்சி

வனவிலங்கு சரணாலயங்கள், மலைத்தொடர்கள், வண்ணமீன் கண்காட்சியகம், தேயிலைத் தோட்டங்கள், அணைகள், அருவிகள், ஆறுகள் மற்றும் வயல்வெளிகள் என பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. 
சுற்றுலா மற்றும் சினிமா துறையின் பூமியாகவும் விளங்குகிறது 
நம் பொள்ளாச்சி மாவட்டமாக மாற்றினால் சுற்றுலாத் தலங்கள் மேம்பாடு அடையும். அதிக அளவில் வருவார்கள்
இதன் மூலம் பொள்ளாச்சி நகராடசியின் பொருளாதாரம் பெருகும்

 உயர் மருத்துவ வசதிகள்

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதி இல்லாததால் தினமும் நூற்றுக்கணக்கான பொள்ளாச்சி மக்கள் கோவைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. 

இதில் அவசர சிகிச்சைக்காக கோவை செல்லும் அவசர மருத்துவ ஊர்தி(ஆம்புலன்ஸ்கள்)மட்டும் தினமும் 20க்கும் மேல் இருக்கும்

இதில் வால்பாறை மடத்துக்குளம் பகுதியில் இருந்து வரும் ஆம்புலன்ஸ்களும் உண்டு

பொள்ளாச்சியில் உயர்தர மருத்துவமனையுடன் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டால் பல உயிர்கள் காப்பாற்றப்படும். 

உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து மேம்படும்

சாலை வசதிகள், வட்ட சாலைகள், பாலங்கள், போக்குவரத்து மேம்பாடு முதலியவை பொள்ளாச்சி தனி மாவட்டமானால்  எளிதாகும்
மாநிலத்தின் அனைத்து நகரங்களுக்கும் பேருந்து வசதி கணிசமாக உயரும்
பொள்ளாச்சியிலிருந்தும் பொள்ளாச்சி வழியாகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல இரயில் வசதிகள் கிடைக்கும். 
உள்கட்டமைப்பு வசதிகள் அதிமானால் வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துவது எளிதாகும்

வணிகம் பெருகும்

புதிய தொழில்களுக்கான அனுமதிகளை பெறுவதற்கும், தொழில் சூழ்நிலைகளை விளக்குவதற்கும், கொள்கை மாற்றங்களை கோருவதற்கும், வரிசிக்கல்களை தீர்ப்பதற்கும் கோவை சென்று வர கடினமாக உள்ளது என வர்த்தகர்கள் கூறுகின்றனர். 
பொள்ளாச்சி மாவட்டமாக உருவானால் மக்கள்தொகை அதிகரிப்பு, சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு, மத்திய மாநிலத்தின் அதிக நிதி மற்றும் கவனம் கிடைப்பதாலும்,பொருளாதார வளர்ச்சி, அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு அதிகரிப்பதால் பொள்ளாச்சி பகுதிகளின் வணிகம் பெருகும்
ஆட்டோ, லாரி, வேன் ஓட்டுனர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும்.  நேரடியாகவும் மறைமுகமாகவும் பல ஆயிரம் வேலை வாய்புகள் உருவாகும்

அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்

மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம்,  மாவட்ட காவல்துறை அலுவலகம், கடுவுசீட்டு(Passport) அலுவலகம், மாவட்ட நீதிமன்றம் முதலிய அலுவலகங்கள் பொள்ளாச்சியில் நிறுவப்படும் போது வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்
பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் உருவாக்கப்படும். இதனால் பல்வேறு தனியார் துறை வேலைவாய்ப்புகள் பெருகும்
பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் 

கல்வி மற்றும் விளையாட்டு துறை முன்னேற்றம்

பொள்ளாச்சி மாவட்டமானால் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான கேந்த்ரா வித்யாலயா, நவோதயா கல்வி நிறுவனங்கள் பொள்ளாச்சி பகுதிக்கு கிடைக்கும்
கிரிக்கெட் கால்பந்து முதலிய விளையாட்டு மைதானங்கள் பொள்ளாச்சிக்கு அரசு மூலம் கிடைக்கும்
அதுபோல தடகளம் மற்றும் நீச்சல் மைதானங்கள் சர்வதேச அளவில் பொள்ளாச்சிக்கு கிடைக்கும் 
சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் மக்களின் அலைச்சல் குறையும்
நம் பகுதியை சேர்ந்த மக்கள் வேலைவாய்ப்பு, கல்லூரி, நீதிமன்றம், மருத்துவமனை, அரசு நிர்வாகம், போக்குவரத்து முதலிய தேவைகளுக்காக கோவை செல்கின்றன. 
பொள்ளாச்சியை மாவட்டமாக்கினால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, உடுமலைப்பேட்டை, வால்பாறையை சேர்ந்த மக்கள் கோவை செல்வது தவிர்க்கப்படும். 
வாகனப் போக்குவரத்து  குறைவதால் சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks