Truetamilnews.com

சுப்ரீம் ஸ்டார் ராமநாதன் சரத்குமார், 1986ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் வெளியான ‘Samajamlo Sthree’ என்ற படத்தில் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு 1989ம் ஆண்டு வெளியான சட்டத்தின் மறுபக்கம் என்ற படத்தின் மூலம் அவர் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஆனால் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் 1990ம் ஆண்டு வெளியான புலன் விசாரணை என்ற படத்தில் வில்லின் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெரிய அளவில் பேசப்பட்டார்.

அன்று தொடங்கி இன்று வரை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகின்றார். இந்த ஆண்டில் இவர் வானம் கொட்டட்டும் என்ற படத்தில் நடித்தார். மேலும் பிறந்தால் பராசக்தி, அடங்காதே, பாம்பன் போன்ற படங்களில் நடித்து வருகின்றார்.

அது மட்டும் இல்லாமல் 1974ம் ஆண்டே இவர் மிஸ்டர் மெட்ராஸ் பட்டம் பெற்றவர்.

நடிப்பை போல இவர் தனது உடற்கட்டையும் பல ஆண்டுகளாக சிறப்பாக கவனித்து வருகின்றார். இவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், தென்காசி தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

இந்நிலையில் இவருக்கு கொரோனா தாக்குதலுக்கு உள்ளானது தெரிய வந்துள்ளது.இது குறித்து இவரது மகளும் நடிகையுமான வரலக்ஷ்மி சரத்குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.எனது தந்தை சரத்குமார் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது ஐதராபாத் உள்ளார் என்றும் கொரோனாவிற்காக தீவிர சிகிச்சை பெற்று வருவதாக வரலட்சுமி சரத்குமார் உறுதிபடுத்தியுள்ளார்.

இதனால், அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks