truetamilnews.com


தங்கத்தை அணிவதால் உடலுக்கு அழகு கிடைப்பது போல கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் பளப்பளப்பு அடைகிறது.   இதனால் தான் கேரட் தாவரத் தங்கம் என்று அழைக்கப்படுகிறது.  மேலும் புற்றுநோயை தடுக்கவும் நல்ல மருந்தாக பயன்படுகிறது.

கேரட்டில் உள்ள கரோட்டின் எனும் சத்தானது புற்றுநோய்க்கு தேவையான எதிர்ப்புச் சக்தியை தருகிறது.  பீட்டா கரோட்டின் எனும் நோய் எதிர்ப்பு சக்தியை கேரட் தருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதை தவிர வயிறு சம்பந்தமான நோய்களையும் குணமாக்கும் ஆற்றலும் கேரட்டுக்கு உள்ளது.


உதாரணமாக குடல்புண் (அல்சர்) உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வழி வரும் நபர்கள் கேரட் சாற்றினை வாரத்திற்கு மூன்று முறை வீதம் இரண்டு மாதங்கள் சாப்பிட்டு வர அவை குணமாகும். மேலும் கேரட்டில் நார்ச்சத்துகள் அதிகம் இருப்பதால் மிகுந்த நன்மை  தருவதோடும், செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்தியையும் தருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks