ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக 5-வது தொடரை வென்றுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நேற்று நடந்த 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்ததால் 3 போட்டி கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

20 ஓவர் போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 5-வது தொடரை கைப்பற்றியது. வங்காள தேசத்துக்கு எதிராக 2019 நவம்பரில் 2-1 என்ற கணக்கிலும், வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் (2019 டிசம்பர்) 2-1 என்ற கணக்கிலும், இலங்கைக்கு எதிராக (2020 ஜனவரி) 2-0 என்ற கணக்கிலும், நியூசிலாந்து மண்ணில் (2020 ஜனவரி-பிப்ரவரி) 5-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி இருந்தது.
அதற்கு முன்பு தென் ஆப்பிரிக்காவுடனான தொடர் (2019 செப்டம்பர்) 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இந்திய அணி கடைசியாக விளையாடிய ஏழு 20 ஓவர் தொடரில் 6 தொடரை கைப்பற்றியது. ஒரு தொடர் சமனானது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2019 பிப்ரவரி மாதம் 20 ஓவர் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. அதன்பிறகு இந்திய அணி இதுவரை 20 ஓவர் தொடரை இழந்தது இல்லை.

இந்திய அணி 20 ஓவர் போட்டியில் தொடர்ச்சியாக 10-வது வெற்றியை பெற்று சாதித்துள்ளது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2019 டிசம்பரில் நடந்த 2-வது 20 ஓவர் போட்டியில் தோல்வியை தழுவியது. அதன் பிறகு இந்திய அணி விளையாடிய 10 ஆட்டத்திலும் (வெஸ்ட் இண்டீஸ் 1, இலங்கை 2, நியூசிலாந்து 5, ஆஸ்திரேலியா 2) வெற்றி பெற்று முத்திரை பதித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks