சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை புகழ்ந்து பேசியுள்ளார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களைத் தெரிவித்து கூட்டணியில் இருக்கிறதா இல்லையா என்ற கேள்வியை எழுப்பியது. அமித் ஷாவின் சென்னை வருகைக்குப் பின் இந்த பிரச்சினை சற்று ஓய்ந்துள்ளது.

அமித் ஷா பங்குபெற்ற அரசு நிகழ்வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர் செல்வமும் பாஜக உடன் கூட்டணி என மாறி மாறி உறுதிப்படுத்தினர்.

அதன்பின் பாஜகவைச் சேர்ந்தவர்கள் அதிமுக கூட்டணி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்கவில்லை. இந்நிலையில் முன்னாள் பாஜக தலைவரும் தற்போதைய தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்னும் ஒரு படி போய் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், “தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று கூறுவார்கள். தம்பி விஜயபாஸ்கர் இருப்பதால் கொரோனாவிற்கு அஞ்சேன். தெலங்கானாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தபோது தெலங்கானா முதல்வருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் தீவிரமாக சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள் என்றார். இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களிடம் கேட்டு சொல்கிறேன் என்றேன்.

அதிகமான பரிசோதனைகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுக்குள் வைத்து உள்ளீர்கள் என்று பிரதமர் மோடியின் பாராட்டையும் பெற்று தமிழக சுகாதாரத்துறை பொறுப்பாக செயல்பட்டு வருகிறது” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks