நாடு முழுவதும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு தீவிரம்இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் (டிசம்பர் 6) என்பதால், ரயில் நிலையங்களில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், சென்னை ரயில்வே காவல் மண்டலத்துக்குட்பட்ட ரயில் நிலையங்களில் 900 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட பாஜக முக்கிய தலைவர்கள் முன்னிலையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தால் பெரும் வன்முறை வெடித்தது. பலர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி,நாடு முழுவதும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்படும்.

அந்தவகையில் இன்று தமிழக ரயில்வே போலீஸார் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப்படையினர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், கோவை, மதுரை, ஈரோடு, சேலம் உட்பட அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும், பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது கொரோனா பொது முடக்கம் தளர்வுகளுடன் அமலில் உள்ள நிலையில் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. அந்த சிறப்பு ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால் தான் பயணிக்க முடியும். மேலும், தீவிர சோதனைக்கு பிறகே ரயில்வே பாதுக்காப்புப் படையினர் பயணிகளை ரயில்களில் பயணிக்க அனுமதித்து வருகின்றனர்.

சென்னை ரயில்வேயை பொறுத்தவரை பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 4 துணை மண்டலங்களில் 900 ரயில்வே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதே போல் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் 300 ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks