truetamilnews.com

ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர். இவர் ஐபிஎல்லில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடி வருகிறார். அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்தியாவில் விளையாடுவது தனக்கு விருப்பமான ஒன்று என தெரிவித்துள்ள வார்னர், தெலுங்கில் வெளியாகி ஹிட்டடித்த “புட்டபொம்பா” உள்ளிட்ட பாடல்களுக்கு டிக்டாக் செய்து அசத்தி வருகிறார். அவை இந்திய ரசிகர்களிடம் வரவவேற்பையும் பெற்று வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டியிலும் ‘புட்டபொம்பா’ பாடலின் அசைவுகளை மைதானத்தில் வெளிப்படுத்தினார் வார்னர்.

இந்தநிலையில், சமூக வலைதளங்களில் தமிழர்களிடம் வைரலான ‘வணக்கம்டி மாப்ள’ வீடியோ ஸ்டைலில் வார்னரை வரைந்து, ரசிகர் ஒருவர் அவருக்கு அனுப்பியுள்ளார். அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வார்னர், அதற்கு தலைப்பிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.அவ்வோவியத்தினை பார்த்து உற்சாகமடைந்த தமிழக ரசிகர்கள், அவரை தமிழகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தது வருகின்றனர்.வார்னர் பகிர்ந்த அந்த ஓவியம், தற்போது வேகமாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks