சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அதிமுகவினர் அம்மா என்ற ஹேஷ்டேக்கை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது, #அம்மா என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்தியளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது. தமிழகத்தில் அம்மா என்ற ஹேஷ்டேக் முதலிடத்தில் உள்ளது.

டிசம்பர் 5: அழியாப்புகழ் பெற்ற இரும்பு பெண்மணி… ஜெயலலிதா நினைவு நாள்..!

தமிழகத்தின் முதல் பெண் எதிர்கட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், 6 முறை முதல்வர் என தமிழக அரசியலில் அசைக்க முடியாத தலைவியாக இரும்பு பெண்மணியாக உலா வந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுகவினர் இன்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முதல்வர் அஞ்சலி

தமிழ்நாட்டு மக்களின் உயர்வும், மகிழ்ச்சியுமே தனது வாழ்வின் லட்சியமாகக் கொண்டு “மக்களால் நான்; மக்களுக்காகவே நான்” என தன்வாழ்வை மக்களுக்காக அர்ப்பணித்த மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் 4-ஆம் ஆண்டு நினைவு தினத்தில் எனது அஞ்சலியை உரித்தாக்குகிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிங்கமாக உலா வந்த ஜெயலலிதா

ஜெயலலிதா உயிருடன் இருந்த போது தமிழக அரசியலில் பெண் சிங்கமாக உலா வந்தார். பிரதமர் மோடி முதல் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் வரை அனைவரையும் நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக பேசியுள்ளனர். அந்த புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இணையவாசி சிங்கம் உயிரோடு இருந்த போது என்று குறிப்பிட்டுள்ளார்.

இரும்பு பெண்மணி

இந்தியாவின் இரும்புப்பெண்மணி என்று பதிவிட்டு சிரித்த முகத்தோடு காட்சியளிக்கும் ஜெயலலிதாவின் பல்வேறு முக பாவனைகளை பதிவிட்டுள்ளனர்.

ஜெயலலிதாவிற்கு அஞ்சலி எதிரிகளின் கோட்டையை தகர்த்து தூள் தூளாக்கிய பெண் சிங்கம் ஒன்று இளைப்பாறிய தினம் இன்று என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks