இம்யூனிட்டி பூஸ்டர் ஸமூத்தி

தேவையான பொருட்கள்

பசலைக்கீரை, லெட்யூஸ்(Lettuce), புதினா, கொத்தமல்லித்தழை– ஒரு கைப்பிடி அளவு, வெள்ளரிக்காய் துண்டுகள்(தோலுடன்)–கால் கப், தயிர்–கால் கப் தண்ணீர்– 50 மில்லிசாட் மசாலா தூள்– ஒரு சிட்டிகை, உப்பு–தேவையான அளவு.

 செய்முறை 

ஒரு மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்யப்பட்ட பசலைக்கீரை, லெட்யூஸ்(Lettuce), புதினா, கொத்தமல்லித்தழை, வெள்ளரிக்காய் துண்டுகள் ஆகியவற்றுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும்.

இதைவடிகட்டாமல் தயிர் சாட் மசாலா சேர்த்து அப்படியே பருகவும். காலை வேலையில் ப்ரேக்பாஸ்டாக ஒரு கிளாஸ் இந்த ஸ்மூத்தி, இரண்டு பழங்கள் சாப்பிட்டாலே போதும். காலை முதல் மாலை வரை நம் உடல் சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் இயங்கும்.

பயன்கள்

இந்த ஸ்மூத்தியில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து பொருள்களிலும் நோய் எதிர்ப்பு மூலக்கூறுகள் அதிகமாக உள்ளன.

கிரைகளில் உள்ள ஃபோலிக் ஆசிட், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் கே போன்றவை மற்றும் தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் போன்றவை நம் உடலுக்கு நன்மை செய்யும்.

 இதை வடிகட்டாமல் அப்படியே பருகும்போது நம் உடலுக்கு தேவையான நார்சத்துகள் முழுமையாக கிடைக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks