பிக் பாஸ் 4ல் ரேங்க் வழங்குவதற்காக நடந்த வாக்குவாதத்தில் சண்டை மிக மோசமான வகையில் நடைபெற்றது.

Big Boss 4 Tamil Day 60 Highlights

பிக் பாஸ் 4 வீட்டில் 60ம் நாள் நடந்த சம்பவங்களின் தொகுப்பு..

பாலாஜி – ஜித்தன் ரமேஷ் சண்டை

அர்ச்சனா டாஸ்க் காலில் சிறப்பாக செயல்பட்டார் என ரம்யா கூறினார். ஆனால் அவர் காலை கட் செய்ததால் டாப் 6ல் வர கூடாது என பாலாஜி முருகதாஸ் எழுந்து நின்று பேசினார். அதனால் கோபமான ஜித்தன் ரமேஷ் ‘நீ ஆரியை பேசவிடாமல் போன் பேசிவிட்டு கட் செய்துவிட்டாய். இப்படி எழுந்து நின்று பேசி டாப் 6ல் வந்து விடலாம் என பாக்குறியா’ என கேள்வி கேட்டார். ஜித்தனா இது என நாமே வியக்கும் அளவுக்கு அது இருந்தது.

முதலிடத்திற்கு சண்டை

முதல் இடம் யாருக்கு என சண்டை வெடித்தது. அர்ச்சனா, ஆரி, அர்ச்சனா ஆகியோர் முதலிடத்திற்கு நின்றுகொண்டு வாக்குவாதம் செய்தனர். பாலாஜி எனக்கு பயந்து கால் செய்யவில்லை என சனம் கூறியதால் ஒரு பிரச்சனை துவங்கியது. அதை பற்றி பாலாஜி நக்கல் செய்தார்.

இறுதியில் ஆரிக்கு முதலிடம் வந்தது. அதன் பின் சனம் இரண்டாம் இடத்திற்கு சண்டை போட்டார். அப்போது வாக்குவாதம் முற்றி பாலாஜி தன்னை தானே செருப்பால் அடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.

வெளியேறிய அனிதா

வாக்கெடுப்பில் குழப்பம் நீடிப்பதால் தனக்கு 3வது இடம் கிடைக்கவில்லை என்ற கோபத்தில் அனிதா தான் போட்டியிலேயே இல்லை என கூறிவிட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு இறுதியில் 10வது இடம் கொடுக்கப்பட்டது.

கண்ணீர் விட்ட பாலாஜி

பாலாஜி முருகதாஸ் பிறந்தநாளுக்காக கேக் மற்றும் ஒரு லெட்டர் அனுப்பப்பட்டு இருந்தது. பாலாஜியின் தங்கை தான் அந்த கடிதத்தை எழுதி இருந்தார். அதை பார்த்ததும் பாலாஜி கண்ணீர் விட்டுஅழுதார். அதன் பின் கேக் வெட்டி கொண்டாடினர். அதன் பின் பாலாஜியின் தங்கை பேசிய வீடியோ காட்டியது. அதை பார்த்து அவர் மகிழ்ச்சி அடைந்தார்.

luxury budget குறைப்பு

இந்த வாரம் நடைபெற்ற கால் சென்டர் டாஸ்கில் 10 முறை கால் கட் செய்யப்பட்டு இருப்பதால் மொத்தம் 2600 மதிப்பெண்களில் 2000 குறைக்கப்பட்டு வெறும் 600 மதிப்பெண் மட்டும் வழங்கப்பட்டது. அதை கொண்டு அவர்கள் சிக்கன் மட்டன் என எதுவும் வாங்க முடியாது என்பதால் வெறும் ரவை மற்றும் சத்து மாவு ஆகியவற்றை மட்டுமே பெற்றுக்கொண்டனர்.

விருது விழா

பிக் பாஸ் வீட்டில் குட் டே பிஸ்கட் சார்பில் ஒரு விருது விழா நடத்தப்பட்டது. அதில் அர்ச்சனாவுக்கு அன்பானவர் என்ற பட்டத்தை ஆஜித் கொடுத்தார், அதன் பின் அஜித்துக்கு தங்கமகன் என்ற பட்டத்தை அர்ச்சனா கொடுத்தார்.

அதன் பின் வழங்கப்பட்ட விருதுகள் விவரம்

அனிதா – Most Trustworthy
ரியோ – நண்பேன்டா
ஷிவானி – புன்னகை அரசி
சோம் – Most Lovable
ஆரி – எல்லாவற்றிலும் நல்லதை பார்ப்பவர்
சனம் – Most Caring
ஜித்தன் ரமேஷ் – Everyone’s Friend
பாலா – Always Positive
நிஷா – குஷி நாயகி
ரம்யா – Most Cheerful
கேபி – Most Enthusiastic

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks