truetamilnews.com

தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பதற்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கொரோனா குறையாமல் உள்ள சூழலில் தியேட்டர்களை திறப்பது ஆபத்தானது எனக் கூறியுள்ள அமைச்சர், வேறு வழியின்றி OTT இல் படங்களை வெளியிடுவதை தவிர்க்கலாம் எனவும் கூறியுள்ளார். OTT யில் வெளியிட வேண்டாம் என்பது தனது தனிப்பட்ட கருத்து எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் குறைந்த எண்ணிக்கையிலான இருக்கைகளுடன் செயல்பட அனுமதித்தாலும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு இழப்பு தான் ஏற்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks