செவ்வாய் கிரகத்தில் வருகிற 2026ஆம் ஆண்டுக்குள் மனிதனை தரையிறக்கும் முயற்சி வெற்றி பெரும் என்று ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைம செயல் அதிகாரி எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

எலான் மஸ்க்

உலக நாடுகள் பலவும் செவ்வாய் கிரகத்துக்கு போட்டி போட்டுக் கொண்டு வின்கலங்களை அனுப்பி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக செவ்வாய் கிரகத்திற்கு ரோவர் விண்கலத்தை அனுப்பியுள்ள அமெரிக்காவின் நாசா, அதற்கு பெர்செவரன்ஸ் என்று பெயரிட்டுள்ளது. இந்த வின்கலம் செவ்வாய் கிரகத்தை பிப்ரவரி மாதம் சென்றடையும் என்றும் செவ்வாய் கிரகத்தில் ஒர் ஆண்டு வரை தங்கி ஆய்வுகளில் ஈடுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செவ்வாய் கிரகத்தில் வருகிற 2026ஆம் ஆண்டுக்குள் மனிதனை தரையிறக்கும் முயற்சி வெற்றி பெரும் என்று ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைம செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். Axel Springer விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஏறக்குறைய ஆறு ஆண்டுகளில் விண்வெளி வீரர்கள் செவ்வாய் கிரகத்தில் இறங்குவார்கள் என தான் எதிர்பார்ப்பதாகவும், அந்த எதிர்பார்ப்பின் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஒருவேளை அதிர்ஷ்டம் ஏற்பட்டால் 4 ஆண்டுகளிலேயே அது நடக்கும் என்று தெரிவித்த அவர், இன்னும் 3 ஆண்டுகளில் இதற்கான முயற்சிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார். செவ்வாய் கிரகத்திற்குச் சென்று வாழ்க்கையை பன்முகப்படுத்தக்கூடிய, சந்திரனில் ஒரு தளத்தை, செவ்வாய் கிரகத்தில் ஒரு நகரத்தை உருவாக்கக்கூடிய தொழில்நுட்பத்தை வளர்ப்பதில் நான் வெளிப்படையாக அக்கறை கொண்டுள்ளேன் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks