2020 ஆண்டு அனைவருக்கும் நல்லாருக்கும் என்று பார்த்தல் அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. அதிலும் இந்த டிசம்பர் மாதம் இன்னும் பயங்கரமாக இருக்கிறது. ஏற்கனவே கொரோனா, ஊரடங்கு, நிவர் புயல் என்று மக்கள் அவதிப்பட்ட நிலையில், இப்போது புரேவி புயலும் தாக்கி வருகிறது. இன்னும் புயல் கரையைக்கூட கடக்காத நிலையில், தெற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகுவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

கொரோனா, ஊரடங்கு, இவை இரண்டுமே வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத துயரத்தை மக்களுக்கு வழங்கிவிட்டது.அத்துடன் நிவர் புயலும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளது.

இந்நிலையில் இன்னும் சில மணி நேரங்களில் புரேவி புயல் தன் ஆட்டத்தை தென்மாவட்டங்களை ஆரம்பிக்குப்போகிறது. மாலை அல்லது நள்ளிரவு பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தென்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் அதிகனமழை பெய்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் தான் வங்க கடலில் நிவர் புயல் உருவாகி புதுச்சேரி- மரக்காணம் இடையே கரையை கடந்தது. நிவர் புயலால் கடலூர் மாவட்டமும், சென்னை புறநகர் பகுதியும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் புரேவி புயல் தென்மாவட்டங்களில் கடந்தாலும் கடலோர மாவட்டமான சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்னும் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது என்பது தெரியவில்லை. அதற்குள் புதிய காற்றழுத்தம் உருவாகி உள்ளதால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலாய் தீபகற்ப பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை மையம் விளக்கம் அளித்துள்ளது. பொதுவாக தெற்கு அந்தமான் கடலில் காற்றழுத்தம் உருவானால் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்பதுடன் புயலாக மாறினால் பலத்த சேதத்தையும் விளைவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks