பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் இன்று முதல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நிதியுதவி டெபாசிட் செய்யப்படுகிறது.

pm kisan moneyவிவசாய நிதியுதவித் திட்டத்தின் ஏழாவது தவணைப் பணம் இந்த மாதம் முதல் தேதியிலிருந்து அனைவரின் வங்கிக் கணக்கிலும் டெபாசிட் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. எப்போது பணம் கிடைக்கும்? யாருக்கெல்லாம் பணம் கிடைக்கும்? பணம் கிடைக்காவிட்டால் என்ன செய்ய வேண்டும்? என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமா?

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தீன் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, 2018ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. 2019-20 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை ரூ.2,000 என ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் விவசாயிகளுக்கு விரைந்து பணம் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டு அதன்படி வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் விண்ணப்பிக்கலாம். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதேநேரம், நிறுவன விவசாயிகள், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் மாதத்திற்கு 10,000 ரூபாய்க்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்கள் போன்றோர் இந்த நிதியுதவிக்கு விண்ணப்பிக்க முடியாது.

மத்திய அரசின் இந்தத் திட்டத்தில் நிறைய விவசாயிகள் இன்னும் இணையாமல் இருக்கின்றனர். கொரோனா ஊரடங்கு பிரச்சினையால் சிலரால் இணைய முடியாமல் போனது. இப்போது அவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. பிஎம் கிசான் நிதியுதவியைப் பெற விரும்பும் விவசாயிகள் முதலில் மாநில அரசு அல்லது உள்ளூர் வருவாய் அதிகாரி பரிந்துரைத்த நோடல் அதிகாரியை அணுக வேண்டும். பொதுச் சேவை மையங்களில் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளை பதிவு செய்து பயன்பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளைப் பதிவு செய்வதற்கான முழுப் பொறுப்பும் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் உள்ளது. பி.எம் கிசான் தளத்திலும் விவசாயிகள் நேரடியாக இந்த திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, குடியுரிமை சான்றிதழ், நில உரிமையாளரின் ஆவணங்கள் மற்றும் ஜன தன் வங்கி கணக்கு விவரங்கள் தேவைப்படும். ஆன்லைன் விண்ணப்பத்தின் போது, பிரதமர் கிசான் வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ போர்ட்டலில் ’farmers corner’ என்ற ஒரு பிரிவு உள்ளது . இந்த போர்டல் மூலம் விவசாயிகள் தங்களை பதிவு செய்ய வேண்டும். அவர்கள் தங்களது பெயரைத் திருத்தம் செய்ய இந்த போர்ட்டலையும் பயன்படுத்தலாம். நிதியுதவியின் தற்போதைய நிலை குறித்த தகவல்களையும் இந்தப் பக்கத்தில் விவசாயிகள் தெரிந்துகொள்ளலாம்.

விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் தகுதியுள்ளவர்களுக்குப் பணம் வந்துசேரவில்லை என்றால் அரசின் ஹெல்ப் லைன் எண்களுக்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம். அதேபோல, மின்னஞ்சல் மூலமாகவும் புகார் செய்யலாம்.பிஎம் கிசான் டோல் ஃப்ரீ நம்பர்: 18001155266, பிஎம் கிசான் ஹெல்ப் லைன் நம்பர்: 155261, பிஎம் கிசான் லேண்ட் லைன் நம்பர்: 011-23381092, 23382401, பிஎம் கிசான் புதிய உதவி எண்: 011-24300606, பிஎம் கிசான் ஹெல்ப் லைன்: 0120-6025109, மின்னஞ்சல் முகவரி: [email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks