சென்னை: #45YearsOfRajinism குறித்த சுவாரஸ்யமான விஷயத்தை வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகிறேன் என அவரது செய்தித் தொடர்பாளர் ரியாஸ் கே அகமது வெளியிட்டுள்ளார். பூடகமாக அவர் வெளியிட்டுள்ளதால் அந்த ட்வீட் எதைப் பற்றியது என தெரியவில்லை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து நேற்றைய தினம் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும் என மன்ற நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் ரஜினியோ தனது உடல்நிலை குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் தான் அரசியலுக்கு வர இயலாது என்பதை நாசுக்காக ரஜினி தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ரஜினி நிலைப்பாடு

எனினும் அரசியலுக்கு வருவது குறித்து ரஜினியின் நிலைப்பாட்டை இன்று (டிசம்பர் 1) அவர் அறிக்கை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதையே மாநில நிர்வாகி சுதாகரும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று காலை முதல் அறிக்கை வெளியாகும் என ரசிகர்கள் ஒரு வித படபடப்புடனே இருந்தனர்

ட்வீட்

ஆனால் இது வரை எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. மேலும் ரஜினி வருவாரா வரமாட்டாரா என ரசிகர்கள் வாட்ஸ் ஆப் குரூப்புகளிலும் விவாதம் நடத்த தொடங்கினர். இந்த நிலையில் ரஜினியின் செய்தித் தொடர்பாளர் ரியாஸ் கே அகமது ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார்.

சுவாரஸ்யம்

அதில் #45YearsOfRajinism- க்காக ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை வீட்டிலிருந்தபடியே தயார் செய்து கொண்டிருக்கிறேன். பொறுத்திருந்து பாருங்கள் என தனது ட்விட்டில் தெரிவித்துள்ளார். ஒரே பூடகமாக ரியாஸ் தெரிவித்துள்ளதால் அது என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஆராய்ச்சி செய்ய தொடங்கிவிட்டனர்

உடல்நிலை

ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்த ஏதேனும் விரிவான அறிக்கையா இல்லை ரஜினி சினிமாவுக்கு வந்து 45 ஆண்டுகள் ஆன நிலையில் அதுகுறித்த ஏதாவது புத்தக ரிலீஸா என தெரியவில்லை. ஒரு ட்வீட்டில் ரஜினியை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள், அரசியலை விட அவரது உடல்நிலைதான் முக்கியம் என்கிறார் இந்த வலைஞர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks