பாரத் நெட் விவகாரத்தில் விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்.

கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ் பாபு, 1995-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி. கிருஷ்ணகிரி, சிவகங்கை மாவட்ட கலெக்டராக பணியாற்றி உள்ளார்.பதவிக்காலம் முடிவதற்கு முன்பே பாரத் நெட் டெண்டர் விவகாரத்தில் அழுத்தம் கொடுத்ததால் விருப்ப ஒய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர்.

இந்நிலையில், விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். இன்று கட்சியில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபுவை உடனடியாக அக்கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிகழ்வில், முன்னாள் ஐ.ஏ.எஸ்சந்தோஷ் பாபு நேர்மையான தலைவர் ஒருவர் வேண்டும் என்பதால் தான் நான் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தேன்.பாரத் நெட் டெண்டர் விவகாரத்தில் எனக்கு அழுத்தம் இருந்தது. அதனால் பதவியில் இருந்து விலகினேன்’ என்று கூறியுள்ளார்.

பின்னர், செய்தியாளர்களிடம் மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியபோது, நேர்மையானவர், வல்லவர்களுக்கு நல்ல சூற்றுச்சூழலை உருவாக்கும் இடம் மக்கள் நீதி மய்யம். பொது ஆரோக்கியம் கருதி சுற்றுப்பயணத்தை சற்று தள்ளி வைத்து இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

மேலும், கோவிட் 19, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தமிழக அரசின் செயல்பாட்டில் எனக்கு திருப்தி இல்லை.

சமுதாயத்தின் மீது ஏற்படும் கோபத்தை மற்றவர்கள்போல் என்னால் மறைத்து இருக்க முடியாது. எந்த துறையில் ஊழல் இருந்தாலும் மாற்ற வேண்டும். அரசு துறையில் தற்போது யானை புகுந்த காடாக மாறிவிட்டது‌ என்றும் கமல்ஹாசன் குற்றம்சாட்டினார்.

கூட்டணி அமைத்து வாழ்நாள் முழுவதும் கொத்தடிமையாக இருக்க முடியாது. கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன். கூட்டணி இல்லாமல் நாங்கள் தனித்து நிற்க வேண்டும் என்று தான் எல்லா கட்சிகளின் ஆசை. அதற்கு மக்கள் நீதி மய்யம் விதிவிலக்கு அல்ல என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், அரசிற்கு கொள்கை இருக்கிறது. எந்த துறையையும் அஜாக்கிரதையாக விட கூடாது. விவசாயத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். இது எனது கோரிக்கை அல்ல குரல். வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலிக்கு அனைவரின் வீட்டிற்கும் சென்று ஆலோசனை கேட்பேன். என் நண்பர் ரஜினியை மட்டும் விட்டுவிடுவேனா கண்டிப்பாக ஆதரவு கேட்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் நண்பர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை விட அவரது ஆரோக்கியம் தான் எனக்கு முதலில் முக்கியம். ரஜினியும், நானும் திரைத்துறையில் போட்டியாளராக இருந்து இருக்கிறோமே தவிர பொறாமைக்காரர்களாக இருந்தது இல்லை. வருங்காலத்தில் ரஜினியும், நானும் போட்டியாளராக இருக்கலாம், இல்லாமலும் போகலாம். எனக்கு தொழிலைவிட அரசியலில் தான் ஆர்வம் அதிகம். அதனால் தான் தொழிலை விட்டுவிட்டு அரசியலில் நுழைந்துள்ளேன் என்று கமல் கூறியுள்ளார்.

விவசாயிகள் போராட்டத்தை அஜாக்கிரதையாக விடக்கூடாது. அரசின் சிந்தாந்தைங்களை எல்லாம் மாற்றி வைத்துவிட்டு தீர்வு காண வேண்டும். இது கோரிக்கை அல்ல,குரல் என்று கமல் கூறியுள்ளார்.

விவசாயிகளின் போராட்டத்தில் மோடியின் நடவடிக்கை எப்படி உள்ளது?? என்று செய்தியாளர்கள் கேட்டபோது ’ரோம் எரியும்போது வயலின் வாசிக்கக்கூடாது’ என்று பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks