truetamilnews.com


சங்குப் பூக்கள் பொதுவாக வெள்ளை மற்றும் நீல நிறங்களில் காணப்படும். வெள்ளைப் பூக்கள் பூக்கும் தாவரத்திற்கு அதிக மருத்துவ குணங்கள் இருப்பதாக குறிப்புகள் கூறுகின்றன. 

சங்குப் பூக்கள் வேறு சில பெயர்களில் கூட அழைக்கப்படுகிறது. சங்கு புஷ்பம், மாமூலி, கன்னிக் கொடி, காக்கணம், காக்கரட்டான் என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றது. சங்குப் பூக்கள் தமிழகம் முழுவதும் காடுகள், வேலிகள், தோட்டங்கள் ஆகிய இடங்களில் இயற்கையாக வளர்கின்றது. சங்குப் பூவின் இலைகள், வேர்கள், மலர்கள், விதைகள் மருத்துவத்தில் பயன்படுகிறது. 
சங்குப் பூவின் வேரை 40கிராம் எடுத்து நசுக்கி 1/2லிட்டர் தண்ணீரில் போட்டு 1/4 லிட்டராக காய்ச்சி வடிகட்டி 3 தேக்கரண்டி வீதம் சாப்பிட வேண்டும். 2 மணி நேரத்திற்கு ஒரு முறை என ஒரு நாளில் 6 முறை சாப்பிட காய்ச்சல் குணமாகும். 
சங்குப் பூ வேர், கீழா நெல்லி முழுத் தாவரம்,  யானை நெருஞ்சில் இலை, அருகம்புல் இவை ஒவ்வொன்றும் ஒரு கைப்பிடியுடன் 5 மிளகு சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவாக தயிரில் சேர்த்து சாப்பிட வேண்டும். 10 நாட்கள் காலையில் சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் மற்றும் சிறுநீர் எரிச்சல் குணமாகும். 
தேவையான அளவு சங்குப் பூக்களின் இலைகளை எடுத்து விளக்கெண்ணெயில் வதக்கி பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் போட்டால் வீக்கம் கட்டுப்படும். 
குழந்தைகளுக்கு ஏற்படும் இரைப்பை நோயை குணப்படுத்த சங்குப் பூவின் விதையை நெய்யில் வறுத்து இடித்து தூளாக செய்து ஒரு சிட்டிகை விதைத் தூளை வெந்நீரில் கலந்து கொடுக்கலாம். 
யோனிப் புண்களை குணமாக்க சங்குப் பூக்களை நீரில் கொதிக்க வைத்து, அந்த கொதிநீரால் பொறுக்கும் சூட்டில் புண்களை கழுவலாம். பால்வினை நோய்கள், வெள்ளைப்படுதல் உள்ளவர்களுக்கு யோனியில் ஏற்படும் துர்நாற்றம் கட்டுப்படும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks