truetamilnews.com

திருமலை: ஆந்திராவில் மதுபாட்டில்கள் பதுக்கியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யாமல் தாயிடம் மகளை லஞ்சமாக கேட்ட எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பொண்டூரு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ராமகிருஷ்ணா. இவருக்கு துங்கபேட்டா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று எஸ்ஐ ராமகிருஷ்ணா போலீசாருடன் அங்கு சென்று மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார். அப்போது, வீட்டிலிருந்த இளம்பெண்ணை எஸ்.ஐ. நோட்டமிட்டுக் கொண்டிருந்தார். 


மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை.அங்கிருந்த இளம்பெண்ணின் தாயிடம் போலீஸ் நிலையத்திற்கு வந்து பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். எனவே, அந்த இளம்பெண்ணின் தாய் போலீஸ் நிலையத்திற்கு வந்தபோது அவரின் செல்போன் நம்பரை கேட்டு பதிவு செய்துகொண்டு வீட்டிற்கு அனுப்பி விட்டார். பின்னர், அந்த செல்போனில் நம்பருக்கு எஸ்.ஐ. தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது, ‘மது பாட்டில்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க வேண்டும் என்றால், உன்னுடைய மகளை எனது வீட்டுக்கு ஒரு இரவுக்கு மட்டும் அனுப்பி வைக்க வேண்டும்’ என கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் தாய், எஸ்ஐயின் கோரிக்கையை நிறைவேற்றுவது போல் அவருடன் நைசாக பேசி செல்போனில் அவரது உரையாடல்களை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து எஸ்பியிடம் புகார் அளித்தார். அதன்பேரில், எஸ்.ஐயை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks