இறந்த விலங்குகள் கல்லறையில் இருந்து வெளியே வந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கடந்த சுமார் ஓராண்டு காலமாக கொரோனா கொள்ளை நோயுடன் உலக மக்கள் போராடி வருகின்றனர். இதற்கிடையே, மிங்க் எனப்படும் கீரி வகை விலங்குகளுக்கு இடையே கொரோனா தொற்று பரவியது.

மிங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவிவிடுமோ என்ற அச்சத்தில் டென்மார்க் நாட்டில் மிங்க் பண்ணைகளில் பல லட்சக்கணக்கான மிங்குகள் கொல்லப்பட்டு ஒட்டுமொத்தமாக புதைக்கப்பட்டன.

இந்நிலையில், புதைக்கப்பட்ட இடங்களில் இருந்து சில மிங்குகள் எழுந்து வருவதாக டென்மார்க் அரசிடம் தெரிவிக்கப்பட்டது. இப்படி மிங்குகள் மீண்டும் எழுந்து வரும் காட்சிகளை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இதையடுத்து, மிங்குகள் புதைக்கப்பட்ட இடங்கள் மீண்டும் தோண்டப்படும் என டென்மார்க் அரசு தெரிவித்துள்ளது. ஹொல்ஸ்டெப்ரோ நகரில் உள்ள ராணுவ பயிற்சி முகாமுக்கு வெளியே உள்ள இடத்தில்தான் மிங்குகள் எழுந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்துக்கு பொதுமக்கள் யாரும் வராத வண்ணம் 24 மணி நேரம் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும், மிங்குகள் வெளியே வருவதால் சுகாதாரக் கேடுகள் ஏற்படுமோ என உள்ளூர்வாசிகள் பீதியில் உள்ளனர். எனினும், சுகாதாரக் கேடுகள் ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மிங்குகளிடம் இருந்து 12 பேருக்கு கொரோனா தொற்று பரவியதால் நாட்டில் உள்ள அனைத்து பண்ணைகளிலும் மிங்குகள் கொல்லப்பட வேண்டுமென டென்மார்க் அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இதனால், 1.7 கோடி மிங்குகள் கொலை செய்யப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks