truetamilnews.com

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர்.


மாநகரம் மற்றும் கைதி என இரண்டே திரைப்படங்களை இயக்கியதன் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.
மேலும் இவர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் மாறுபட்ட கதைக்களத்தில் உருவான கைதி திரைப்படம்.
மக்களின் பேராதரவை பெற்றதுமில்லாமல், சுமார் 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது.

அதனை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் இணைந்த லோகேஷ் கனகராஜ், அவரை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லாக்டவுன் முடிந்தவுடன் திரைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் முன்பு வெளியான தகவலின்படி ஜெயில் காட்சி இடம் பெற்றுள்ளது.
ஜெயில் உடையை அணிந்து கொண்டு அப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் உள்ளிட்டோர் புகைப்படம் எடுத்துள்ளனர்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது, இதோ அந்த புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks