வெற்றி இயக்குனராக வளர்ந்து வரும் லோகேஷ் கeனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மாஸ்டர்’. அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், ஏப்ரல் மாதம் திரைக்கு வர வேண்டிய இத்திரைப்படம் கொரோனா ஊரடங்கால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

இதனிடையே ‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை மறுத்த படக்குழு திரையரங்கில் மட்டுமே வெளியாகும் என்று கூறியிருந்தது. இதையடுத்து நவம்பர் 10-ம் தேதி திரையரங்குகளை திறக்க தமிழக அனுமதி அளித்தாலும் 50% இருக்கைகளை நிரப்புவதற்கு மட்டுமே ஒப்புதல் அளித்திருக்கிறது.
எனவே தீபாவளிக்கு மாஸ்டர் படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு, திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அரசு அனுமதி அளிக்கும் போது படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் விலைக்கு வாங்கியிருக்கிறது.

எனவே படத்தைத் தியேட்டரில் ரிலீஸ் செய்வதா அல்லது நேரடியாக OTT தளத்தில் ரிலீஸ் செய்வதா என்று படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்று #MasterOnlyOnTheaters ஹாஸ்டேக்யை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks