truetamilnews.com

கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிலிவர்ஸ் ஈஸ்டர்ன் சர்ச்சுக்கு சொந்தமான மூன்று இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிலிவர்ஸ் ஈஸ்டர்ன் சர்ச்சுக்கு சொந்தமாக தமிழகத்தில் உள்ள மூன்று இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

30 அறக்கட்டளைகள் கொண்ட இந்த பிலிவர்ஸ் ஈஸ்டர்ன் சர்ச் குழுமத்துக்கு, வெளிநாட்டிலிருந்து 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வந்துள்ளதாகவும், அதில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகவும் இரகசிய புகார்கள் வருமான வரித்துறையினருக்கு வந்துள்ளது.

இதனை அடுத்து நாட்டில் தமிழகம் (தமிழகத்தில் உள்ள மூன்று இடங்களிலும்) உள்ளிட்ட மொத்தம் 6 மாநிலங்களில், இந்த சர்ச் குழுமத்துக்கு சொந்தமான 63 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

நேற்றைய வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், பல போலி அறக்கட்டளை செயல்பட்டதும், 6 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks