truetamilnews.com

ஜகார்த்தா: 78 வயசு தாத்தா, 17 வயசு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார்.. என்ன ஆனதோ தெரியவில்லை.. திடீரென 22 நாட்களில் டைவர்ஸ் செய்துவிட்டார்கள்!

இந்த சம்பவம் இந்தோனேஷியாவில் நடந்துள்ளது.. பொதுவாக அந்த தீவில் நடக்கும் கல்யாணம் என்றாலே கொஞ்சம் ஸ்பெஷல்தான்.. ஒரே மேடையில் 2 பெண்களை கல்யாணம் செய்த சம்பவம் உண்டு… கட்டினால் 17 வயது சிறுவனை தான் கட்டுவேன் என்று அடம்பிடித்த 71 வயது பாட்டியும் உண்டு!

இப்போதும் அப்படியேதான் ஒரு கல்யாணம் நடந்தது.. மாப்பிள்ளைக்கு வயசு 78, பொண்ணுக்கு வயசு 17.. இரு வீட்டிலும் விரும்பியே திருமணத்தை செய்துவைத்தனர்.. அபா சர்னா என்பது அந்த தாத்தாவின் பெயர்.. மனைவி பெயர் நோனி நவிதா.

இவர்கள் திருமணம் நடந்தபோதே உலக மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.. யார் கண்ணு பட்டதோ ஒரு மாசம் கூட ஆகவில்லை.. அதற்குள் டைவர்ஸ் கேட்டு கோர்டுக்கு போய்விட்டார் கல்யாண பெண். வெறும் 22 நாட்களில், கணவனை பிரிந்ததுடன், தன்னுடைய டைவர்ஸ் பேப்ரையும் மாப்பிள்ளைக்கு அனுப்பி வைத்துவிட்டார்.

ஆனால், இதனை நோனியின் சகோதரி வன்மையாக மறுத்துள்ளார்.. மேலும், கல்யாண பெண் மீதுள்ள ஆசையால், ஒரு பைக், மெத்தை, கிளோசெட், இந்தோனேசியா பணம் RM 2,819 (இந்திய மதிப்பில் ரூ. 50,000) ஆகியவற்றை நோனிக்கு, மாப்பிள்ளை தாத்தா கல்யாணத்தின்போது தந்திருக்கிறார்.

நம்ம ஊர் போல இல்லை.. அங்கே மணமகன்தான் மணமகளின் குடும்பத்திற்கு வரதட்சணை தருவார்களாம்.. இப்போது டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டதும், அந்த வரதட்சணை பொருட்கள் ஒரு டிரக் மூலம் திருப்பி கொண்டு செல்லப்பட்டன… அந்த போட்டோக்கள்தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks