truetamilnews.com

ஹெட்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞருக்கு போலீஸார் 42 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் மடிவாலாவில் வசிக்கும் காய்கறி வியாபாரியான அருண்குமார் என்பவர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற போது போக்குவரத்து போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர்.

சாதாரணமாக ஹெல்மெட் அணியவில்லை என்றால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆனால் அருண்குமாருக்கு போலீஸார் 42,000 ரூபாய் அபராதம் விதித்தனர். ரசீதும் 2 மீட்டர் அளவுக்கு இருந்தது. இதனால் அவர் ஒரு நிமிடம் ஆடிப்போனார்.

ஆனால் இவ்வளவு தொகை அபராதமாக விதிக்கப்பட்டது குறித்து காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.  அதாவது அருண்குமார் இதுவரை 77 முறை போக்குவரத்து விதியை மீறியுள்ளார் என்றும், அதனால் 42 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

போலீஸார் விதித்த அபராதத் தொகையைவிட தான் ஓட்டி வந்த பைக்கின் விலை குறைவு என்று கூறினார் அருண்குமார். இதனையடுத்து அபராதம் கட்ட அவர் போலீஸாரிடம் அவகாசம் கேட்டார். இதனையடுத்து அவரது பைக்கை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks