truetamilnews.com

மதுரை: நெல் கொள்முதலில் முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? புற்றுநோயை விட வேகமாக பரவும் ஊழலில் ஈடுபடும் அரசு அலுவலர்களை ஏன் தூக்கிலிடக் கூடாது என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். தமிழகத்தில் தேவையான அளவுக்கு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட பொது நலன் வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. முன்னதாக, நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குநர் சுதாதேவி, தாக்கல் செய்த பதில் மனுவில், ”தற்போது 862 நேரடி நெல் கொள்முதல் மையங்கள் உள்ளன. ஊரடங்கு காலத்தில் 2.42 லட்சம் விவசாயிகளிடம் இருந்து 12.25 லட்சம் ெமட்ரிக் டன் நெல் கொள்முதல் ெசய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2,416 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
எந்தவித முறைகேடும் நடக்கவில்லை. 6 சிறப்புக் குழுக்கள் மூலம் 1,725 முறை திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், முறைகேடு நடந்தது தொடர்பாக 105 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டிருந்தது. இந்த பதில் மனுவை படித்துப் பார்த்த நீதிபதிகள், ” ஒரு இடத்தில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என கூறி விட்டு, மற்றொரு இடத்தில் முறைகேடு தொடர்பாக 105 பேர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இது முரண்பாடாக உள்ளதே? இதுபோன்ற தவறான தகவல்களை தரும் அதிகாரிகள், நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி வரும். விவசாயிகள் இரவு, பகலாக வெயில், மழையை பொருட்படுத்தாது உழைத்து, விளைவித்த நெல்லை கொள்முதலுக்கு கொண்டு வந்தால், பிச்சை எடுப்பது போல அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர்.

லஞ்சம் வாங்காமல் நேர்மையாக உழைப்பவர்களை ‘பிழைக்கத் தெரியாதவன்’ என பட்டம் சூட்டி ேகலி செய்கின்றனர். அரசு அலுவலர்கள் ஊழலில் ஈடுபடுவது புற்றுநோயைப் போன்றது. இது நாட்டின் வளர்ச்சியை அரித்துக் கொண்டே இருக்கிறது. புற்றுநோயை விட மிக வேகமாக பரவி வருகிறது. ஊழலில் ஈடுபடும் அரசு அலுவலர்களை ஏன் தூக்கிலிடக் கூடாது” என சரமாரி கேள்விகளை எழுப்பினர். பின்னர் நீதிபதிகள், ”105 பேர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இதுதொடர்பாக எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில், எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் எதுவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதா? விளைபொருட்கள் கொள்முதலின்போது விவசாயிகளுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டுள்ளது? இந்த காலக்கட்டத்தில் அரசு அலுவலர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசின் வேளாண்மைத்துறை செயலர் தரப்பில் பதிலளிக்க வேண்டும்.

எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கை மீது அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை தடுக்கும் வகையில் நீதிபதி ராஜன் குழு தாக்கல் செய்த அறிக்ைகயின் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும், தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு, விசாரணையை வரும் 9ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks