truetamilnews.com

கமல்ஹாசன் தலைமையில் மூன்றாவது அணி அமையும் என்றும், திமுகவுடன் கூட்டணி அமைக்கிறார் கமல்ஹாசன் என்றும் பேசப்பட்டு வந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், ”நம் கூட்டணி மக்களுடன்”என்று பேசியிருக்கிறார்.

தனது நண்பரான ரஜினியுடன் கூட்டணி அமைக்க பெரிதும் விரும்பினார் கமல்ஹாசன். அதை சூசகமாக பல நேரங்களில் சொல்லி வந்த கமல், நேரடியாக ஒரே மேடையில் அமர்ந்திருக்கும்போது சொல்லிப்பார்த்தார். ”துணிந்து வாங்க ரஜினி” என்றே அழைத்துப்பார்த்தார். ஆனால், இப்போது வரைக்கும் ரஜினி அமைதியாக இருப்பதாலும், அப்படியே அவர் கட்சி ஆரம்பித்தால் தன்னுடன் கூட்டணி அமைக்க மாட்டார் என்பதையும் உறுதியாக தெரிந்துகொண்ட கமல்ஹாசன், யாருக்காகவும் நாம் காத்திருக்க தேவையில்லை.  ஊழலை எதிர்த்துதான் நாம் போட்டியிடப்போகிறோம் என்று அண்மையில் நடந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசினார் கமல்.

இதன்பின்னரும் கமல்ஹாசன் அந்த கட்சியுடன் கூட்டணி இந்த கட்சியுடன் கூட்டணி என்று செய்திகள் வந்த வண்ணம் இருக்கும் நிலையில், நம் கூட்டணி மக்களுடன் என்று அறிவித்திருக்கிறார்.

கமல்ஹாசன் இப்படிச்சொன்னதும், விஜயகாந்த் ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார் கமல்ஹாசன் என்றே பேச்சு எழுந்திருக்கிறது. தேமுதிகவை தொடங்கிய விஜயகாந்த் மக்களுடன் தான் கூட்டணி என்றே சொல்லிவந்தார் முதல் தேர்தல் அதன்படியேதான் செய்தார். ஆனால், அடுத்து வந்த தேர்தலில் மக்களுடன் கூட்டணி என்றே கடைசிவரை சொல்லிவந்து, கடைசியில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார். அடுத்ததாக, தன்னை கூட்டணியின் தலைவராகவும், முதல்வர் வேட்பாளராகவும் ஏற்றுக்கொண்ட மக்கள் நலக்கூட்டணியில் இணைந்தார்.

மக்களோடுதான் கூட்டணி என்று நான் சொல்லிவந்திருக்கிறேன். அந்த வகையில் இதுவும் மக்கள் நலக்கூட்டணி என்பதால்தான் இணைந்துள்ளேன் என்று கூறினார் விஜயகாந்த்.

மக்களோடுதான் கூட்டணி என்பதில் கமல் உறுதியாக இருக்கப்போகிறாரா? இல்லை, விஜயகாந்த் மாதிரி கடைசி நேரத்தில் கூட்டணியா என்பது தெரிய இன்னும் சில மாதங்கள்தானே இருக்குது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks