truetamilnews.com

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பை கொண்டு தேய்த்தாலும் போகவில்லையா? கவலை வேண்டாம். சிறிது சர்க்கரையை எடுத்து தேய்த்து பாருங்கள். அழுக்கு போய்விடும். ஆக அழுக்கை நீக்கும் வேதிப் பொருளைத்தான் நாம் தினமும் அள்ளி அள்ளி தின்று கொண்டிருக்கிறோம்.

அழுக்கை நீக்கும் இந்த சர்க்கரையை தின்றால்  நம் குடல் என்ன பாடுபடும்.இனிப்பை விரும்பி சாப்பிடாதவர்கள் இவ்வுலகில் யாரும் இல்லை. காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காபியிலிருந்து இரவு படுக்கும் முன் குடிக்கும் பால் வரை சர்க்கரை ஒரு ஊடு பொருளாக மாறியுள்ளது. பதார்த்தத்தில் என்றில்லை. சர்க்கரையை அப்படியே அள்ளியும் தின்கின்றோம்.

இந்த வெள்ளை சர்க்கரையின் தயாரிப்பினை நீங்கள் தெரிந்து கொண்டால் இனி அதை தொடக்கூட மாட்டீர்கள்.

இதை தயாரிக்க என்னென்ன இராசாயனப் பொருட்கள் பயன்படுகின்றன என்று பார்ப்போம்.

  1. கரும்பிலிருந்து பிழியப்படும் சாற்றுடன் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.
  2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரேட் வரை பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம்  கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுகிறது.
  3.  இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 விகிதம் என்கற அளவில் சல்பர்-டை-ஆக்ஸைடு வாயு கலக்கப்படுகிறது.
    102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழக்கவைத்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு சேர்த்து விடுகிறது. 
  4. அடுத்து பாலி எலக்ட்ரோலைட்  சேர்த்து தெளிகலனில் மண், சக்கை தனியாக பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.
  5.  சுடுகலனில் காஸ்டிக் சோடா வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜூஸ் தயாரிக்கப்படுகிறது. 
    மறுபடியும் சல்பர்-டை-ஆக்ஸைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க சர்க்கரை நிலையான படிக நிலைக்கு வருகிறது. சல்பர்-டை-ஆக்ஸைடு நஞ்சு சர்க்கரையில் கலந்து விடுகிறது. இப்படி தயாரான சர்க்கரையில் மீதம் இருப்பது கார்பன் என்னும் கரியே.
    தயாரான நாளிலிருந்து ஆறுமாத காலத்துக்கும் மேலான சர்க்கரையை சாப்பிடக்கூடாது. காரணம் அதில் உள்ள சல்பர்-டை-ஆக்ஸைடு மஞ்சல் நிறமாக மாறி வீரியமுள்ள விஷமாக மாறிவிடுகிறது. குடலில் மட்டுமல்ல இதய நோய், பல் வலி, பல் சொத்தை, சளித்தொல்லை, உடல் பருமன், குடல்புண், இர்த்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதி போன்ற பெரிய வியாதிகளுக்கும் இதுதான் காரணமாக அமைகிறது.
    ஆலைகளில் தயாராகும் வெள்ளை சர்க்கரையை சாப்பிடுவதை நிறுத்திவிட்டு வெல்லம்,  பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் சர்க்கரை வியாதியோ இதய நோயோ இரத்த அழுத்தமோ ஏற்படாது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks