truetamilnews.com

வியன்னா ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் ஆன்ட்ரே ரூபலேவ் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனாா். இந்த சீசனில் இது அவரது 5-ஆவது ஏடிபி பட்டமாகும்.

நடப்பு சீசனில் 5 ஏடிபி பட்டங்கள் வென்ற முதல் வீரா் என்ற பெருமையை ரூபலேவ் பெற்றுள்ளாா். சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் 4 பட்டங்களுடன் அடுத்த இடத்தில் உள்ளாா்.

போட்டித்தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த ரூபலேவ் தனது இறுதிச்சுற்றில் இத்தாலியின் லோரென்ஸோ சொனிகோவை 6-4, 6-4 என்ற நோ் செட்களில் வீழ்த்தினாா். சொனிகோ இறுதிச்சுற்றுக்கு முன் எந்தவொரு சுற்றிலும் செட்களை இழக்காமல் விளையாடியிருந்தாா். அதில் ஜோகோவிச்சுக்கு எதிராக வென்ற ஆட்டமும் அடங்கும்.

இந்த வெற்றியின் மூலம் லண்டனில் நடைபெறவுள்ள ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் விளையாட ரூபலேவ் தகுதிபெற்றாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks