இஸ்லாமாபாத்: தாவூத் இப்ராகிம், மசூத் அசார் உள்ளிட்ட 88 தீவிரவாதிகள், தீவிரவாத அமைப்புகளின் வங்கிக் கணக்கை முடக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. உலக நாடுகளின் சட்ட விரோத நிதிப் பரிவர்த்தனைகளை கண்காணிக்கும் அமைப்பான எப்ஏடிஎப், பாரீசை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. சட்ட விரோதப் பணப்பரிமாற்றம், பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளிப்பது போன்றவற்றில் ஈடுபடும் நாடுகளைக் கண்காணித்து, அவற்றை, இந்த அமைப்பு கருப்பு பட்டியலில் சேர்க்கிறது. இதன் மூலம், இந்த நாடுகள் மற்ற உலக நாடுகளுடன் எந்த பொருளாதார நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாது. இந்த நிதி கண்காணிப்பு குழு, கடந்த 2018ம் ஆண்டு பாகிஸ்தானை, கருப்பு பட்டியலுக்கு முந்தையை இடத்தில் உள்ள சாம்பல் பட்டியலில் சேர்த்தது.தீவிரவாத ஒழிப்புக்காக சர்வதேச நாடுகள் வரையறுத்திருக்கும் 40 விதிகளில், 32 விதிகளை இந்நாடு ஒழுங்காகப் பின்பற்றவில்லை என்பதைக் கண்காணித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது பாகிஸ்தானுக்குக் கடும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும், இது குறித்து விளக்கமளிக்க சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பு 2019 வரை பாகிஸ்தானுக்குக் கெடு விதித்திருந்தது. இந்த கெடு கொரோனா ஊரடங்கால் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தடை பட்டியலில் நீடித்தால் நிலைமை மோசமாகிவிடும் என்பதை உணர்ந்த பாகிஸ்தான், நிழலுலக தாதா தாவூப் இப்ராகிம், பாகிஸ்தான் தீவிரவாத தீவிரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் மற்றும் 88 தீவிரவாத தலைவர்கள் மீது நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்தது. அவர்களின் வங்கிக் கணக்குகள் அனைத்தையும் முடக்கியது. இருப்பினும், இது கண்துடைப்பு நாடகம் என இந்தியா குற்றம்சாட்டி உள்ளது.


தலிபானுக்கும் தடைஆப்கனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் தலிபான் தீவிரவாத இயக்கத்தின் மீதும் பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. ஆனால், இதுவரை பாகிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கை பற்றி தலிபான் தீவிரவாதிகள் எந்த கருத்தினையும் தெரிவிக்கவில்லை. தலிபான் தீவிரவாதிகள் பலருக்கும் பாகிஸ்தானில் சொத்துக்களும், தொழில்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks