புதுச்சேரி : புதுச்சேரி போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் 12 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், மற்ற போலீசார் அச்சத்தில் உள்ளனர்.

கோரிமேட்டில், போலீஸ் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளை, போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, புகார் அளித்து அதன் மூலம் நடவடிக்கை எடுக்கும் மையமாக செயல்படுகிறது.இந்த கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் ஒரு சப் இன்ஸ்பெக்டர், உதவி சப் இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் என 12 பேர் நேற்று வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கட்டுப்பாட்டு அறை முக்கியமான பணி என்பதால், மூடப்படாமல் தொடர்ந்து இயங்கி வருகிறது.

தொற்று ஏற்பட்டவர்களுடன் பணியில் இருந்த மற்ற போலீசார் தனிமைப்படுத்தப்படாமல் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தங்களுக்கும் தொற்று ஏற்படுமா என்ற அச்சத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks