புதுச்சேரி : சட்டக்கல்லுாரி மாணவர்களுக்கு பருவத் தேர்வு வரும் 14ம் தேதி துவங்குகிறது. இதுகுறித்து புதுச்சேரி பல்கலைக்கழக உதவி பதிவாளர் (மருத்துவம்) வெங்கடேஸ்வரன், பல்கலைக்கழக இணைப்பு சட்டக்கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்ற றிக்கை:மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டு சட்டப்படிப்பு மற்றும் பிரெஞ்சு முதுநிலை பட்டய படிப்பு ஆகிய சட்டப்படிப்புக்களுக்கு பருவத் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.

புதுச்சேரி தேர்வு மையமாக காலாப்பட்டு அம்பேத்கர் அரசு சட்டக்கல்லுாரியும், அந்தமானில் தேர்வு மையமாக அங்குள்ள சட்டக்கல்லுாரி செயல்படும். அந்தந்த கல்லுாரி முதல்வர்கள் தலைமை கண்காணிப்பாளராக செயல்படுவர்.தேர்வுக்கான ஆன்லைன் பதிவு வரும் 27ம் தேதி முதல் செப்.8ம் வரை நடைபெறும். தேர்வு கட்டணத்தை செப்.9ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். செப்.9ம் தேதி முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படம்.அகமதிப்பீடு மதிப்பெண்ணுக்கான பதிவு செப்.9ம் தேதி தொடங்கி 11ம் தேதி முடியும். பருவ (செமஸ்டர்) தேர்வு செப்.14ம் தேதி தொடங்கி அக்.13ம் தேதி நிறைவடையும்.மாணவர்கள் முறையாக விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு, கல்லூரி நிர்ணயித்த கட்டணத்துடன் அளிக்க வேண்டும். அது கல்லுாரி முதல்வரால் கையொப்பமிடப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks