truetamilnews.com

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் 2020 தொடரின் 46 ஆவது போட்டி பஞ்சாப் – கொல்கத்தா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய நிதிஷ் ரானா முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆனார். ஆனால் மற்றொரு தொடக்க ஆட்டாக்காரரான சுப்மன் கில் அதிரடியாக விளையாடி 57 ரன்கள் அடித்தார். ஐபிஎல் தொடரில் இது அவருக்கு 6 ஆவது அரை சதமாகும்.

மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க கேப்டன் இயன் மார்கன் மட்டுமே நிதானமாக விளையாடி 40 ரன்கள் அடித்தார்.

இறுதியில் கொல்கத்தாக அணி 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே அடித்தது.

150 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல் 28 ரன்களுக்கு வருன் சக்ரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து நிதானமாக விளையாடிய மந்தீப் சிங் 49 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதேபோல் அதிரடியாக விளையாடிய கிறிஸ் கெயிலும் 25 பந்துகளில் அரை சதம் அடித்தார், ஆனால் 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் 18.5 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.

மந்தீப் சிங் 66 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றி மூலம் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்தது பஞ்சாப் அணி.

ஐபிஎல் 2020 தொடரின் தொடக்கத்தில் கடைசி இடத்தில் இருந்த பஞ்சாப் அணி இப்போது தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பதிவு செய்து 4 ஆவது இடத்துக்கு முன்னேறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks