truetamilnews.com

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகள் முடிந்தவுடன் இந்திய அணியானது ஆஸ்திரேலியா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணியுடன் டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் உள்ளிட்ட மூன்று வடிவங்களிலும் ஆன தொடரில் விளையாட உள்ளது.

இந்த போட்டி தொடருக்கான இந்திய அணி ஆனது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று அணிகளுக்கும் கேப்டனாக விராட் கோலியும், டெஸ்ட் அணிக்கு துணை கேப்டனாக அஜிங்கிய ரஹானே ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கு அணியின் துணை கேப்டனாக ராகுலும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஐபிஎல்லில் ஜொலித்த வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த அணியில் தமிழக வீரர்கள் 4 பேர் இடம்பிடித்துள்ளனர். டெஸ்ட் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், இருபது ஓவர் அணியில் வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி ஆகியோரும், ரிசர்வ் அணியில் நடராஜனும் இடம்பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks