வேலூர்:தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்2 மாணவர்களுக்கு லேப்டாப் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், ஒரு சில பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த லேப்டாப்களை மர்மநபர்கள் திருடிச்செல்லும் சம்பவங்கள் நடந்துள்ளன.இந்நிலையில், தொழிற்கல்வி இணை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா லேப்டாப்கள் களவு போனது தொடர்பான சில விவரங்கள் கோரப்பட்டுள்ளது. 


எனவே, ஆண்டு வாரியாக இதுவரை திருட்டுபோன லேப்டாப்களின் எண்ணிக்கை, பள்ளிகளின் பெயர், காவல் துறையில் முதல் தகவல் அறிக்கை பெறப்பட்ட விவரம், மீட்கப்பட்ட லேப்டாப்களின் எண்ணிக்கை, களவு போன லேப்டாப்களுக்கான தொகையினை அரசுக்கணக்கில் செலுத்திய விவரம்அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks