கொரோனா டெஸ்டில் நெகட்டிவ் வந்தவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துவரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் சைதாப்பேட்டை தேவராஜ் நகர் பகுதியை சேர்ந்த பாபு என்பவர் சிறிய ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வருகிறார். பாபு பணிக்கு சென்று கொண்டிருந்த போது கொரோனா சிறப்பு முகாமை சேர்ந்த ஆட்கள் பரிசோதனை செய்துள்ளனர். அதன்பின்பு 2 நாட்கள் கழித்து பாபுவின் சொல்போனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என குறுஞ்செய்தி வந்துள்ளது. ஆனால் பாபுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறி ஆம்புலன்சில் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனால் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

 3 நாட்களில் வீட்டிற்கு அனுப்பி விடுவோம் என கூறியவர்கள், 6 நாட்களாகியும் வீட்டுக்கு அனுப்பவில்லை என அவர் வேதனை தெரிவிக்கிறார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி பேசும் போது, குறிஞ்செய்தி தவறாக வந்திருக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும், ஆனாலும் அதுகுறித்து விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார். கொரோனா வார்டில் உரிய சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை என்ற புகார் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks