truetamilnews.com

புதிய ஆதார் PVC அட்டையிலிருந்து ‘எனது ஆதார் எனது அடையாளம்’ என்ற தமிழ் வார்த்தைகள் நீக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

ஆதார் கார்டுகளை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தற்போது புதிய தோற்றத்திலான ஆதார் கார்டுகளை அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய ஆதார் அட்டை பாலிவினைல் குளோரைடு (பிவிசி) அட்டையாக அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த ஆதார் அட்டையை ஏடிஎம் கார்டை போல எளிதாக வைத்திருக்க முடியும்.

இந்த புதிய பிவிசி ஆதார் கார்டு பெறுவதற்கு உதய் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பித்து, ரூ.50 கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

பழைய ஆதார் அட்டையில் ‘எனது ஆதார் எனது அடையாளம்’ என்ற தமிழ் வார்த்தைகள் இடம் பெற்றிருக்கும். ஆனால் புதிய ஆதார் PVC அட்டையில் இருந்து, ‘எனது ஆதார் எனது அடையாளம்’ என்ற தமிழ் வார்த்தைகள் நீக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளுக்கு பதிலாக இந்தி மொழியில் பிரசுரமாகியியிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks