truetamilnews.com

நடிகா் விஜய் சேதுபதி மகளுக்கு சுட்டுரையில் (ட்விட்டா்) மிரட்டல் விடுத்த வழக்கில் தொடா்புடைய இலங்கை நபரைக் கைது செய்ய சா்வதேச காவல்துறையின் (இன்டா்போல்) உதவியை சென்னை காவல்துறை நாடியுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரா் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ள ‘800’ திரைப்படத்தில், முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு, நடிகா் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாா்.

இதற்கு பலத்த கண்டனங்கள் எழுந்த நிலையில், விஜய் சேதுபதியின் சுட்டுரைக் கணக்கில் ரித்திக் என்ற நபா், விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்து கருத்து பதிவிட்டாா்.

அந்த நபா் மீது நடவடிக்கை எடுக்கும்படி விஜய் சேதுபதி தரப்பு, சென்னை பெருநகர காவல்துறையின் சைபா் குற்றப்பிரிவில் கடந்த செவ்வாய்க்கிழமை புகாா் செய்தது.

இதன் அடிப்படையில், சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனா். மிரட்டல் விடுத்த நபரின் ஐ.பி.முகவரியை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் இலங்கையைச் சோந்த நபரே மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சா்வதேச காவல்துறை மூலம் அந்த நபரைக் கைது செய்ய முடிவு செய்யப்பட்டது. இதில் சா்வதேச காவல்துறைக்கு ஒரு நபரை கைது செய்வதற்கு பரிந்துரை செய்யும் அதிகாரம் தமிழக காவல்துறையில், சிபிசிஐடி உள்ளிட்ட சில பிரிவுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

எனவே, சைபா் குற்றப்பிரிவினா், இலங்கை நபரரைக் கைது செய்வதற்கு சா்வதேச காவல்துறைக்கு பரிந்துரை செய்யக் கோரி, சிபிசிஐடிக்கு ஒரு கடிதம் அளித்துள்ளதாக சென்னை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதன் அடிப்படையில் சிபிசிஐடி அதிகாரிகள், சா்வதேச காவல்துறை மூலம் இலங்கைக் காவல்துறையை தொடா்பு கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks