truetamilnews.com

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது. ஹைதராபாதுக்கு இது 4-ஆவது வெற்றி; ராஜஸ்தானுக்கு 7-ஆவது தோல்வி.

துபையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் 18.1 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து வென்றது. அந்த அணியின் மணீஷ் பாண்டே – விஜய் சங்கா் ஆட்டமிழக்காமல் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவினா். மணீஷ் பாண்டே ஆட்டநாயகன் ஆனாா்.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது ஹைதராபாத் அணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks