truetamilnews.com

பீகார் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்குவோம் என பாஜக அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரித்தல், பிரச்சாரங்களுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. அதில் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் பீகாரில் கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது.

பாஜகவின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது தாங்கள் ஆளும் மாநிலத்திற்கு மட்டும் இலவசமாக கொடுத்துவிட்டு பிற மாநிலங்களுக்கு விலைக்கு கொடுப்பார்களா என சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks