truetamilnews.com

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டப்பேரவைத் தொகுதிகளின் விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களின் கீழ் வரும் சட்டப்பேரவைத் தொகுதிகளை பிரித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

மாவட்டவாரியாக தொகுதிகள்:

காஞ்சிபுரம்: ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர்(தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம்

செங்கல்பட்டு: சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருபோரூர், செய்யூர், மதுராந்தகம்,

வேலூர்: காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், கீழவைத்தியனாங்குப்பம்,

ராணிப்பேட்டை: அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு

திருப்பத்தூர்: வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர்

விழுப்புரம்: செஞ்சி, மைலம், திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர்

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி(தனி)

நெல்லை: நெல்லை, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம்

தென்காசி: சங்கரன்கோவில்(தனி), வாசுதேவநல்லூர்(தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks