truetamilnews.com

விஜயவாடா: ஆந்திராவில் நவம்பர் 2ம் தேதி முதல் பள்ளிகளை அரைநாள் மட்டும் திறக்க அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. இதனையடுத்து, தற்போது ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சில மாநிலங்களில் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், மீண்டும் கொரோனா பரவல் அச்சம் காரணமாக மாணவர்கள் வருகை குறைந்துள்ளது. மேலும், இந்தியாவிலும் கொரோனா இரண்டாவது அலை வர வாய்ப்பு உள்ளதாக மத்திய ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு மாநிலங்களும் ஆலோசனை மேற்கொள்கின்றன. இதற்கிடையே நேற்று (அக்.,20) நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ‛கொரோனா தொற்று முற்றிலுமாக இன்னும் நீங்கவில்லை, பண்டிகை காலத்தில் கொரோனா பரவலை தடுக்க மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்,’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஆந்திராவில் நவ.,2ம் தேதி முதல் அரைநாள் மட்டும் பள்ளிகள் திறக்க அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, 1, 3, 5, 7, 9, 11ம் வகுப்புகளுக்கு ஒரு நாளும், 2, 4, 6, 8, 10, 12ம் வகுப்புகளுக்கு ஒருநாளும் என மாற்றி மாற்றி அரைநாள் மட்டும் (காலை வேலையில்) பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நடைமுறை நவ., மாதத்திற்கு மட்டுமே எனவும், சூழலை பொறுத்து டிச., மாதத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks