உள்நாட்டு மொபைல் தயாரிப்பு நிறுவனமான லாவா இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை பரிசோதிக்கும் வகையில் மொபைல் ஒன்றை தயார்த்துள்ளது. இதற்கு பல்ஸ்(Pulls) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மொபைலின் விலை ரூ1599.  இது அமேசான் ஃப்ளிப்கார்ட் மற்றும் சில்லறை விற்பனை கடைகளிலும் கிடைக்கும். 2.4 இன்ச் திரையுடன் இருக்கும் இந்த மொபைலில் 32ஜிபி கொள்ளளவை கொண்ட மெமரிக் கார்ட் கொண்டு விரிவாக்கிக் கொள்ளலாம். எஃப்.எம் ரேடியோ மற்றும் இரண்டு சிம் வசதிகளை கொண்டுள்ளது.

1800 எம.ஏ.ஹச் பேட்டரி கொண்ட இந்த மொபைலில் ஒருமுறை சார்ஜ் செய்தால் ஆறு நாட்கள் வரையில் இருக்கும். தானாக அழைப்புகளை பதிவு செய்யும் வசதி, தமிழ், ஆங்கிலம், போன்ற 8 மொழிகளில் டைப் செய்யும் வசதியும் உள்ளது.

இந்த மொபைல் பற்றிய குறிப்பில் “ஒரு இந்திய பிராண்டாக அர்த்தமுள்ள பொருட்களை எங்கள் வாடிக்கயாளர்களுக்கு நாங்கள் வழங்குவதில் தொடர் முயற்சியில் உள்ளோம்.  அதிலும் இப்போது நிலவும் இந்த பதட்டமான சூழ்நிலையில் இது இராணுவத் தரச் சான்றிதழ் பெற்றுள்ளது. அதாவது இந்த மொபைல் கீழே விழும்போது ஏற்படும் சின்ன சின்ன பாதிப்புகள் மொபைலை ஒன்றும் செய்யாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks