truetamilnews.com

உளுந்தூர்பேட்டையில் 200 நாட்களுக்குப் பிறகு, இன்று காலை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில், 3 மணி நேரத்தில் ரூபாய் 1 கோடியே 25 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று வாரச்சந்தை நடப்பது வழக்கம். அதுபோலவே, காலை 7 மணி முதல் 10 மணி வரை ஆட்டுச் சந்தையும் நடந்துவந்தது. தமிழகத்தில் பிரதானமாக விளங்கும் ஆட்டுச் சந்தைகளில் உளுந்தூர்பேட்டை சந்தையும் ஒன்று.

உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தை, கடந்த மார்ச் மாத இறுதியில் ஏற்பட்ட கரோனா பெருந்தொற்று காரணமாக, 200 நாட்களாக நடைபெறவில்லை. தொடர்ந்து அடுத்தடுத்த தளர்வுகளோடு ஊரடங்கு அமலில் இருந்துவந்த நிலையில், கடந்த வாரம் உளுந்தூர்பேட்டை வாரச் சந்தையில் காய்கறி சந்தை இயங்கியது.

அதனைத் தொடர்ந்து இந்த வாரம் முதல் ஆட்டுச் சந்தை நடைபெறும் என பேரூராட்சி மூலம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, உளுந்தூர்பேட்டை வாரச் சந்தையையொட்டி ஆட்டுச் சந்தை அதிகாலையில் தொடங்கியது. 

உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், செங்கல்பட்டு, சேலம், புதுச்சேரி உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தையில் குவிந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks