truetamilnews.com

பீஜிங்: போருக்கு தயாராக இருக்கும் படி சீன வீரர்களை (பி.எல்,ஏ) அந்நாட்டின் அதிபர் ஷி ஜிங்பின்ங் கேட்டுக்கொண்டுள்ளதாக சீன ஊடக செய்தியை மேற்கோள் காட்டி ஆங்கில தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: ஷென்ஜென் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் 40 வது ஆண்டு நிறைவை நினைவையொட்டி சீன அதிபர் ஷி ஜிங்பின்ங் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்திற்கு சென்றார். அங்கு இருந்த வீரர்களிடம் மனதையும் சக்தியையும் போருக்கு தயார்படுத்துங்கள் என அழைப்பு விடுத்துள்ளதாக சீன செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி ஆங்கில டி.வி.ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 12 ம் தேதி (திங்கட்கிழமை) இந்தியா சீனா இடையேயான பதற்றத்தை குறைக்கும் வகையில் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.இந்நிலையில் 13ம் தேதி சீன அதிபர் இவ்வாறு கூறி உள்ளார். முன்னதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அருணாசலபிரதேசம் மற்றும் லடாக் பகுதிகளில் சில பாலங்களை திறந்து வைத்தார். 

இதனை குறிப்பிட்டுள்ள சீனா, இந்தியா எல்லைப்பகுதிகளில் உள் கட்டமைப்பை மேம்படுத்தி ராணுவ பணிகளை முடுக்கி வருகிறது. இது இரு நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்துவதாக அமையும் என கூறி உள்ளது. சீன அதிபரின் பேச்சு இந்தியா அல்லது அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளை குறிப்பிட்டு உரையாடினாரா அல்லது லடாக், அருணாசல பிரதேசம் உள்ளிட்ட எல்லைப்பிரச்னையில் தீர்வு காணப்படாத நிலையில், நாட்டிற்காக முழு விசுவாசத்துடன் இருக்குமாறு அவர் வீரர்களை அறிவுறுத்தினார் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks