truetamilnews.com

வருகின்ற ஜனவரி ஒன்றாம் தேதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்த பணியை மேற்கொள்ள மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, பணிகளை மேற்கொள்வதற்காக அடுத்த மாதம் 16-ஆம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இதில் வாக்காளர்கள் தங்கள் பெயர் விவரங்களை சரிபார்க்க வேண்டும். நவம்பர் 16ம் தேதியிலிருந்து டிசம்பர் 15ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசம் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும். இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் ஜனவரி 5ஆம் தேதி இறுதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 20ஆம் தேதி வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை தமிழக தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று சத்யபிரத சாகு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். வாக்காளர் பட்டியல் தயாரிப்பு தொடர்பான சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் குறித்து நவம்பர் மூன்றாம் தேதி தலைமைச்செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் பதிவு செய்யப்பட்டிருப்பது, இறந்தவர் பெயர் நீக்காமல் இருப்பது உட்பட சில குற்றச்சாட்டுகளை திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கூறிவருகிறது. நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இதுபற்றி ஆலோசிக்க உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks