truetamilnews.com

நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவு அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு வரும் அக்டோபர் 31-ஆம் தேதி வரை தொடரும் எனவும், அதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாது என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்து இருந்தது.

இதனிடையே செப்டம்பர் 21ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் விருப்பப்பட்டால் பள்ளிகளில் ஆசிரியரின் ஆலோசனை பெறலாம் என மத்திய அரசு தெரிவித்தது.

விருப்பமுடைய மாணவர்கள், பெற்றோரின் அனுமதி பெற்ற பிறகே பள்ளிகளுக்கு வரவேண்டும் என்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதி இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் இன்றுமுதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. பெற்றோரின் விருப்ப கடிதம் இருந்தால் மட்டுமே பள்ளிக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

10,12ம் வகுப்புகளுக்கு 3 நாள்களும், 9,11ம் வகுப்புக்கு 3 நாள்களும் என வாரத்தில் 6 நாள்கள் பள்ளிகள் இயங்கும்என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கும் வகுப்புகளுக்கு மாணவர் வருகை பதிவு செய்யப்படாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks