truetamilnews.com

கடந்த 2016 ஆம் வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் அ.பிரபு. பட்டதாரி இளைஞராக இருந்து வந்த பிரபு, தொகுதியில் துடிப்புடன் வலம்வந்துள்ளார். இந்த நிலையில், திருச்செங்கோடு கலைக்கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் 3 ஆம் வருடம் பயின்று வந்த தியாகதுருகம் பகுதியை சார்ந்த சவுந்தியா என்ற பெண்மணியை காதலித்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரது குடும்பத்தினர் சம்மதத்தின் பேரில் வீட்டிலேயே திருமணம் செய்துள்ளார். ஆனால், பெண்ணின் தந்தை தனது மகளை ஏமாற்றி அவர் திருமணம் செய்துள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண்ணின் தந்தை சுவாமிநாதன் ஆட்கொணர்வு மனுவை தக்கலை செய்துள்ளார். அந்த மனுவில், “எனது மகள் சவுந்தர்யா, திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தாள். என்னுடைய மகளை கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு ஆசைவார்த்தைகள் கூறி, கடத்தி உள்ளார்.

இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.புகார் கொடுத்ததைத் தொடர்ந்து எனக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது. எனவே மாயமான எனது மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க கோரி நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் முறையிடப்பட்டது. இதனை தொடர்ந்து, நீதிபதி வழக்கை இன்று (அக்.7) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்து இருந்தனர்.

கல்லூரி மாணவி செளந்தர்யாவை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. திருமணம் செய்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் செளந்தர்யாவின் தந்தை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.

இந்நிலையில், சற்றுமுன் இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., திருமணம் செய்துள்ள அந்த பெண்ணை நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks