நம் சமையலில் முக்கியமாக இருப்பது கறிவேப்பிலை. ஆனால் அதன் அருமை தெரியாமல் அனைவரும் அதை ஒதுக்குகின்றோம்.

இன்றைய மருத்துவ சிந்தனை ...


 இப்போது கருவேப்பிலையில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்று பார்ப்போம்
கறிவேப்பிலையில் அதிக அளவு மெக்னீசியம் உள்ளது.  இதை உண்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் வலிமை பெறுகின்றன.

கறிவேப்பிலையின் 12 மருத்துவ பயன்கள்


கறிவேப்பிலையில் அதிக அளவில் நார்ச்சத்துகள் இருக்கின்றன. நமது செரிமான ஆரோக்கியம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்துகள் மிக மிக முக்கியம்
 தினமும் நாம் உண்ணும் உணவில் கறிவேப்பிலையை சேர்த்துக் கொண்டால் நரை முடி, முடி கட்டுதல் மற்றும் முடி உடைதல் போன்ற பிரச்சினை ஏற்படாது.  மற்றும் உங்களின் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்.

கறிவேப்பிலை நமக்கு வழங்கும் ...


இரும்புச் சத்து குறைபாட்டால் ஏற்படும் பிரச்சினைகளில் முக்கியமான ஒன்று இரத்த சோகை நல்கும். எனவே தினமும் பத்து கறிவேப்பிலையை உண்டு வந்தால் இரத்த சோகை நோய் ஏற்படாமல் இது தடுக்கும்.

கறிவேப்பிலையில் அதிக அளவில் ஆன்டிஆக்சிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதனை உண்டு வந்தால் நரை முடி, செல் அழிவு மற்றும் விரைவில் வயதான தோற்றம் போன்ற குறைகளை நீக்கும். 
தினமும் பத்து கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் உண்டு வந்தால் நீரிழிவு  நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படாமல் இது தடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks